ராணுவ பயிற்சியை நிறைவு செய்த 'பிடிஎஸ்' இசைக்குழுவின் ஆர்எம் மற்றும் வி


ராணுவ பயிற்சியை நிறைவு செய்த பிடிஎஸ் இசைக்குழுவின் ஆர்எம் மற்றும் வி
x
தினத்தந்தி 10 Jun 2025 1:16 PM IST (Updated: 21 Jun 2025 3:54 PM IST)
t-max-icont-min-icon

ஆர்எம் மற்றும் வி தங்களின் ராணுவ பயிற்சியை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் பிடிஎஸ் இசைக்குழுவில் இணைந்துள்ளனர்.

இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் பிடிஎஸ்-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை தங்களது பாடல்களில் புகுத்தியதன் மூலம் உலகம் முழுவதும் பிடிஎஸ் குழு பிரபலமடைந்தனர். அவர்களின் தோற்றமும், பாடல்களும், இசையும் உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றது.

தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு பணியாற்ற வேண்டும். இதில் கே-பாப் கலைஞர்களும் விதிவிலக்கல்ல. அதன்படி பிடிஎஸ் உறுப்பினர்களும் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி முன்னதாக ஜின், ஜே-ஹோப், சுகா ஆகிய 3 பேரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராணுவ பயிற்சியை முடித்தனர். இதனிடையே மீதமுள்ள உறுப்பினர்கள் 4 பேர் கடந்த 2023-ம் ஆண்டு தங்களின் ராணுவ பயிற்சியை தொடங்கினர். இந்நிலையில் ஆர்எம் (RM) மற்றும் வி (V) தங்களின் ராணுவ பயிற்சியை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் பிடிஎஸ் இசைக்குழுவில் இணைந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து ஜிமின் மற்றும் ஜங்கூக் ராணுவ பயிற்சி நிறைவு செய்துவிட்டு இசைக்குழுவில் இணைய உள்ளனர்.

1 More update

Next Story