'பன் பட்டர் ஜாம்' படத்தின் மோஷன் போஸ்டர் வைரல்

''பன் பட்டர் ஜாம்' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'பன் பட்டர் ஜாம்' படத்தின் மோஷன் போஸ்டர் வைரல்
Published on

சென்னை,

பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கு 'பன் பட்டர் ஜாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

'காலங்களில் அவள் வசந்தம்' படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இந்த படத்தை இயக்குகிறார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

தற்போது இந்தப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில், போருக்கு மத்தியில் ராஜு பன்பட்டர் ஜாம் சாப்பிடும் படியான காட்சி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com