'காந்தாரா சாப்டர் 1' படக்குழுவினர் சென்ற பஸ் விபத்து : 6 பேர் காயம்

காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பின் போது படக்குழுவினர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
'காந்தாரா சாப்டர் 1' படக்குழுவினர் சென்ற பஸ் விபத்து : 6 பேர் காயம்
Published on

கர்நாடகா

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம்'காந்தாரா'. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான 'காந்தாரா சாப்டர் 1' படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று மாலை படப்பிடிப்பு பணி நிறைவடைந்த பிறகு, படக்குழுவினரை ஏற்றிச் சென்ற மினி பஸ் ஜட்கல் அருகே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அந்த பஸ்ஸில் 20 ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் இருந்தனர். பஸ் கவிழ்ந்ததில் 6 ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஜட்கல் மற்றும் குந்தாப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜட்கலில் உள்ள மூதூரில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கொல்லூர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com