பாலிவுட்டில் பரபரப்பு... ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா?

தொழில் அதிபருடன், ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலிவுட்டில் பரபரப்பு... ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா?
Published on

பாலிவுட் சினிமாவின் கனவுக்கன்னியாக கோலோச்சிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'ரூஹி', 'குட் லக் ஜெர்ரி', 'மிலி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். அடுத்ததாக ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் 'பெத்தி' திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில் தொழில் அதிபருடன், ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஜான்வி கபூரின் தந்தையும், பட தயாரிப்பாளருமான போனி கபூர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். "எனது மகள் திருமணம் தொடர்பாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. யாரும் இதனை நம்பவேண்டாம்”, என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜான்வி கபூர் திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com