

யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் கதையாக 'டாக்ஸிக்' படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் நடிகர் யாஷ் உடன் கியாரா அத்வானி, நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான 'ஸ்டில்'களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் 'டாக்ஸிக்' படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது சங்கடங்களை உணர்ந்தேன். வேறு வழியில்லாமல் தான் படத்தில் நடிக்கவேண்டியதாக இருந்தது. எனக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என்று கியாரா அத்வானி கூறியதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரப ரப்பை ஏற்படுத்தின.
இதனை கியாரா அத்வானி மறுத்துள்ளார்.