

தனுஸ்ரீ தத்தா நடிகர் நான படேகர் மீது அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து இது போன்ற பாலியல் துன்பறுத்தல்களால் பாதிக்கபட்ட பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை வெளியிட தொடங்கி உள்ளனர்
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான "குயின்" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான "குயின்" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். விகாஸ் பகால் இயக்கிய அந்தப் படத்தில் கங்கனா ரனாவத் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், கங்கணா ரனாவத் அளித்த பேட்டியில், ஒவ்வெரு முறை தன்னை விகாஸ் பகால் சந்திக்கும்பேதும், அவரது பாலியல் துன்புறுத்தல்கள் தெடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் மீது ஏற்கனவே பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாகவும், அவருக்கு ஆதரவாக தான் செயல்பட்டதால், தனக்கு அளித்த பட வாய்ப்பை ரத்து செய்துவிட்டதாகவும் ரனாவத் தெரிவித்துள்ளார்.