நடிகை சுனைனா கடத்தலா? - சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

பிரபல நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நடிகை சுனைனா கடத்தலா? - சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு, 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை சுனைனா, மாசிலாமணி, வம்சம், சில்லு கருப்பட்டி, லத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பேது ரெஜினா என்ற படத்தில் நடித்து வரும் சுனைனாவை, கடந்த 2 நாட்களாக காணவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் கடத்தப்பட்டாரா? என்ற கேள்வியுடன் வீடியோ வைரலானது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த சுனைனா, சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் பேட்டியை கண்டுகளித்த வீடியோ டுவிட்டரில் பதிவிடப்பட்டது. அதன்பின் பதிவு வெளியாகாத நிலையில், சுனைனா காணவில்லை என்ற வீடியோ வைரலானது.

இதுகுறித்து பேலீசார் விசாரணை நடத்தினர். எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், முன்னர் தங்கியிருந்த வளசரவாக்கம் வீட்டிலும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோ, சுனைனா நடித்துள்ள 'ரெஜினா' திரைப்படத்திற்கான புரமோஷன் வீடியோ என்பது தெரியவந்தது.

நடிகை காணவில்லை என்ற வீடியோவை உண்மை போல் உலாவ விட்டு, போலீசார் அதுகுறித்து விசாரிக்கும் அளவுக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com