"கட்டி பிடிக்கலாமா".. மலையாள நடிகையிடம் அத்துமீற முயன்ற ஹோட்டல் ஊழியர்

மலையாள நடிகையிடம் ஹோட்டல் ஊழியர் அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image Credits : AI
Image Credits : AI
Published on

சென்னை,

சென்னை தியாகராய நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகையிடம் ஹோட்டல் ஊழியர் அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான மலையாள நடிகை ஒருவர் தியாகராய நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். நடிகை உணவு ஆர்டர் செய்வதற்காக இன்டர்காமில் தொடர்பு கொண்ட போது அது வேலை செய்யாததால் கீழே ரிசப்ஷனில் சென்று புகார் அளித்ததாக தெரிகிறது. அப்போது இன்டர்காமை சரி செய்வதற்காக வந்த ஹோட்டல் ஊழியர், நடிகையிடம் கட்டிப்பிடிக்கலாமா? என்று கேட்டு அத்துமீற

முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால், நடிகை பயந்து மாம்பலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, தாம் இன்டர்காமை சரி செய்துவிட்டு வந்துவிட்டதாக ஊழியர் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், நடிகை புகார் அளிக்க விரும்பாமல் அறையை காலி செய்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் ஊழியரிடம் இனி இதுபோல் நடக்க கூடாது எழுதி வாங்கி கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com