விஜய் சைக்கிள் நல்லா ஓட்டுறார்னு ஓட்டு போட முடியுமா? இயக்குனர் சேரன் கேள்வி

இடஒதுக்கீடு பிரச்னையின் தீர்வு குறித்து தவெக தலைவர் விஜய் பேசட்டும் என்று இயக்குனர் சேரன் பதிவிட்டுள்ளார்.
விஜய் சைக்கிள் நல்லா ஓட்டுறார்னு ஓட்டு போட முடியுமா? இயக்குனர் சேரன் கேள்வி
Published on

சென்னை,

தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரியில் நேற்று பிராசரம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார். குறிப்பாக தவெக ஆட்சி அமைந்ததும், சிட்டிசன் அஸ் பார்ட்னர்ஸ் இன் கவர்னன்ஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அதில், நமது அரசில் பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்கத் தேவையில்லை. மாறாக பொதுமக்கள் அனைவரும் அரசின் பங்காளர்களாக இருப்பார்கள். ‘மை வெற்றிதமிழ்நாடு.இன்’ என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேசுவதற்கு முன்பு விசில் ஊதியவாறு தொண்டர்களுக்கு மத்தியில் சைக்கிள் ஓட்டினார். தொண்டர்கள், ரசிகர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், விஜய் வாக்குறுதிகளை இயக்குனர் சேரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சேரன் தனது எக்ஸ் பதிவில் “இடஒதுக்கீடு பிரச்னைக்கு தவெக ல ஒரு தீர்வு பேசச்சொல்லுங்க யாரையாவது.... அப்போ நம்ம தவெக பற்றி பேசுவதை நிறுத்திக்கலாம்.. சைக்கிள் ஓட்டுனா, வில்லு விட்டா இந்த பிரச்னைக்கான தீர்வுக்கு விஜய் என்ன நினைக்கிறார்னு மக்களுக்கு புரிஞ்சுருமா... ஏன் தம்பிகளா விஜய் சைக்கிள் நல்லா ஓட்டுறார்னு ஓட்டு போட நாங்க என்னடா தம்பிகளா சைக்கிள்ல பால் யாவாரம் பன்ற கடையா வச்சிருக்கோம்... இல்ல பேரணினா மக்கள் முன்னால 1000 தொண்டர்களோட ஓட்டுங்க... அது ஒரு ஓட்டு கேட்கும் யுத்தின்னு எடுத்துக்குறோம்... ரோட்டுல சர்கஸ் காட்டுறிங்க... மக்கள் என்னடான்னு யோசிப்பாங்கன்னு சிந்திக்க மாட்டிகளா... இருளர் கம்யூனிட்டி எவ்வளவு இடத்துல எத்தனை சதவீதம் இருக்காங்க... எப்போ அவங்க உள் ஒதுக்கீடுல வந்தாங்க.. அதுவரை அவங்களுக்கு அரசு என்ன கொடுத்துச்சு.. என்ன கொடுக்கல... ஏன் கிடைக்கல... அத பேச சொல்லுங்க உங்க தலைவரை... பேப்பர் இல்லாம....” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com