பிகினி அணிந்து நடிக்க முடியாது... ராஷ்மிகா மந்தனா அதிரடி

கவர்ச்சியான உடைகளில் நடிப்பது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
பிகினி அணிந்து நடிக்க முடியாது... ராஷ்மிகா மந்தனா அதிரடி
Published on: 

ஐதராபாத்,

பிகினி அணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அளவுக்கு அதிகமாக உடலை வெளிப்படுத்தும் காட்சிகள் எனக்குப் பொருந்தாது. இதுபோன்ற ஆடைகளை அணிந்து நடிப்பது எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்

இந்திய அளவில் பிரபலம்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் இவர், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’, ‘பீஷ்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, இந்தியில் ‘அனிமல்’ படத்திலும் நடித்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் அவருக்கு இந்திய அளவில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகும் படங்களில் பிசி

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.திருமணத்துக்குப் பிறகும் இருவரும் தங்களது திரைப்பயணத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். ராஷ்மிகா தற்போது பல்வேறு மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.

பிகினி அணிவதில் விருப்பமில்லை

இந்த நிலையில், பிகினி அணிந்து நடிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை ராஷ்மிகா தெரிவித்துள்ளார். சில படங்களில் பிகினி உடை அணிந்து நடிக்க முடியுமா என்று தன்னிடம் கேட்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “பிகினி அணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அளவுக்கு அதிகமாக உடலை வெளிப்படுத்தும் காட்சிகள் எனக்குப் பொருந்தாது. இதுபோன்ற ஆடைகளை அணிந்து நடிப்பது எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால்தான் முடிந்தவரை அதிக கவர்ச்சியுடன் நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்து வரும் ராஷ்மிகா, தனது தனிப்பட்ட விருப்பத்தையும் வசதியையும் கருத்தில் கொண்டு சில காட்சிகளில் நடிப்பதைத் தவிர்ப்பதாகக் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com