முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த "கேப்டன் மில்லர்" படக்குழு - காரணம் என்ன..?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த "கேப்டன் மில்லர்" படக்குழு - காரணம் என்ன..?
Published on

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், கேப்டன் மில்லர் படக்குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்காக நாங்கள் தமிழ்நாடு அரசிற்கும், முதல்-அமைச்சருக்கும் மிகவும் தாழ்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com