பாலிவுட்டில் அறிமுகமாகும் 'கேப்டன் மில்லர்' பட இயக்குனர்


பாலிவுட்டில் அறிமுகமாகும் கேப்டன் மில்லர் பட இயக்குனர்
x

‘கேப்டன் மில்லர்’ பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் தமிழ் சினிமாவில் கடந்த 2021ம் ஆண்டு வசந்த் ரவி நடிப்பில் வெளியான ராக்கி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் 'சாணி காயிதம்' திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் இவர் இயக்கிய திரைப்படம் தான் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இவருடன் இணைந்து சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்பு மீண்டும் தனுஷை வைத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோ பிக்கை இவர் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் அருண் மாதேஸ்வரனின் புதிய படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story