'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்தின் டீசர் வருகிற ஜூலை 28-ந்தேதி நடிகர் தனுசின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com