நவாசுதீன் சித்திக் மீது வழக்கு

நவாசுதீன் சித்திக் மீது வழக்கு
Published on

தமிழில் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்தவர் நவாசுதீன் சித்திக். ஏற்கனவே முன்னாள் மனைவியுடன் நவாசுதீன் சித்திக் மோதலில் ஈடுபட்ட விவகாரம் கோர்ட்டு வரை சென்றுள்ளது. இந்த நிலையில் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். குளிர்பான விளம்பரமொன்றுக்கு நவாசுதீன் சித்திக் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த விளம்பரத்தில் அவர் நடித்தது விமர்சனங்களை கிளப்பி உள்ளது. இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள சில வாசகங்கள் பெங்காலி மக்களின் நடவடிக்கைகளை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாக திவ்யயான் முகர்ஜி என்பவர் கொல்கத்தா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

போலீசாரும் நவாசுதீன் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், "பெங்காலி சமூக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் திட்டமிட்டு எந்த கருத்தையும் இடம்பெற செய்யவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

நவாசுதீன் சித்திக் தரப்பில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள். ஏற்கனவே அவரது முன்னாள் மனைவி அளித்து வரும் தொடர் புகார்களில் திணறி வரும் அவர், தற்போது புதிய வழக்கால் இன்னும் குழம்பி போய் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com