'ஜெய்பீம்' படக் குழுவினர் மீது வழக்குப்பதிவு; காப்புரிமை சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை

'ஜெய்பீம்' படக் குழுவினர் மீது சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
'ஜெய்பீம்' படக் குழுவினர் மீது வழக்குப்பதிவு; காப்புரிமை சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை
Published on

சென்னை:

சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான '2 டி' எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'ஜெய்பீம்' படம் எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கின் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வரும் 26-ந் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசாருக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com