'காதல்' பட நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு


காதல் பட நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு
x

துணை நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் சுகுமாரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

'விருமாண்டி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.' உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் சுகுமாரன். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான 'காதல்' திரைப்படம் மூலம் பிரபலமானார்.

இந்த நிலையில், நடிகர் சுகுமாரன் மீது விருகம்பாக்கத்தை சேர்ந்து துணை நடிகை ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதாவது, நடிகர் சுகுமாரன் திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளவதாக கூறி தன்னிடம் இருந்து நகை மற்றும் பணம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். துணை நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் சுகுமாரன் மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை மாம்பழம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story