திரில்லர் படத்தில் கேத்ரின் தெரசா

கேத்ரின் தெரசா, பிரபல இயக்குனர் வி.என்.ஆதித்யா இயக்கத்தில் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
Catherine Teresa in Thriller Movie
Published on

சென்னை,

கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. கதகளி, கணிதன், கடம்பன். கலகலப்பு-2, அருவம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில், இவர் தற்போது பிரபல இயக்குனர் வி.என்.ஆதித்யா இயக்கத்தில் புதிய திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதன்படி, இப்படத்திற்கு 'பாணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் திரையரங்குகளில் தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என்றும் சமீபத்தில் படக்குழு தெரித்தது.

இப்படத்தில், கேத்ரினுடன், மகேஷ் ஸ்ரீராம், நேஹா கிருஷ்ணா, தணிகெல்ல பரணி, காசி விஸ்வநாத், ரஞ்சிதா, மற்றும் யோகிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். "பாணி" படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com