பட அதிபர் பணம் கொடுத்தாரா? ரூ.2½ கோடிக்கு வீடு வாங்கிய கேத்தரின் தெரசா

தமிழில் கார்த்தி ஜோடியாக மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு–2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
பட அதிபர் பணம் கொடுத்தாரா? ரூ.2½ கோடிக்கு வீடு வாங்கிய கேத்தரின் தெரசா
Published on

நீயா படத்தின் இரண்டாம் பாகத்திலும், சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்திலும் இப்போது நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபகாலமாக அவருக்கு தெலுங்கில் படங்கள் இல்லை. இதனால் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார். நீச்சல் உடை புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த படங்களுக்கு விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இப்படி அரைகுறை உடை படங்களை வெளியிடலாமா? என்று கண்டிக்கிறார்கள். அதை கேத்தரின் பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள கோகா பெட் பகுதியில் கேத்தரின் தெரசா புதிதாக வீடு வாங்கி இருக்கிறார். இதன் விலை ரூ.2 கோடி என்கின்றனர். ஒரு படத்துக்கு சில லட்சங்களே சம்பளம் வாங்கும் கேத்தரின் தெரசா ஆடம்பர வீடு வாங்கியது பற்றி தெலுங்கு இணையதளங்களில் சர்ச்சை கிளம்பி உள்ளன. திரையுலகினர் மத்தியில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

இந்த வீடு வாங்குவதற்கான தொகையை ஒரு தயாரிப்பாளர் கொடுத்து இருப்பதாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து அவர் விரைவில் எடுக்க உள்ள புதிய படத்தில் கேத்தரின் தெரசா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருவரையும் இணைத்தும் கிசுகிசுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com