'இந்தியன் 2' பார்க்க திரையரங்கம் வந்த பிரபலங்கள்

'இந்தியன் 2' இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
Celebrities came to the cinema to watch 'Indian 2'
Published on

சென்னை,

நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர், விவேக், மனோபாலா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை காண சினிமா பிரபலங்கள் பலர் திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் அவரது மனைவி மற்றும் மகள்கள், நடிகர் சித்தார்த் - அதிதி ராவ், விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா, கமல்ஹாசன், பாபி சிம்ஹா, சீமான் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் திரையரங்கம் வந்து 'இந்தியன் 2' படத்தை பார்த்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com