நாகார்ஜுனா மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்


நாகார்ஜுனா மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்
x
தினத்தந்தி 9 Jun 2025 3:18 PM IST (Updated: 21 Aug 2025 11:18 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூரணா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஐதராபாத்,

நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஜைனப் ரவ்ட்ஜியை கடந்த 6ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி நடந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சிரஞ்சீவி, சுரேஷ், ராம் சரண், உபாசனா, வெங்கடேஷ், ராணா, சுரேஷ் பாபு உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

திருமணத்தைத் தொடர்ந்து அக்கினேனி குடும்பத்தினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடத்தினர். இதில் தென்னிந்திய திரைப்படத் துறையின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில், தெலுங்கு நடிகர் ராம் சுரண் நீல நிற சூட்டிலும் அவரது மனைவி உபாசனா மற்றும் மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதா மற்றும் மகள் சிதாராவுடன் வரவேற்புக்கு வந்திருந்தனர். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அகில் அக்கினேனி மற்றும் ஜைனப் ரவ்ட்ஜி திருமண வரவேற்பு நிகழ்ச்சி அவர்களுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இருந்து பிரமாண்ட வரவேற்பு புகைப்படங்கள் பகிரப்பட்டன. அதில் அகில் வெள்வை நிற உடையில் ஸ்டைலாகவும், அவரது மனைவி ஜைனப் பளபளக்கும் வைர நகைகளுடன் கூடிய பீச் நிற உடையிலும் விருந்தினர்களை வரவேற்றனர்.

கடந்த மூன்று வருடங்களாக அகில், ஜைனப் காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story