'தி கோட்' திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த பிரபலங்கள்

தமிழகத்தில் 'தி கோட்' திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது.
'தி கோட்' திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த பிரபலங்கள்
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது.

இந்தநிலையில், பல சினிமா பிரபலங்கள் 'தி கோட்' திரைப்படத்தை பார்க்க திரையரங்குகளில் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான திரிஷா சென்னை மதுரவாயலில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்து வருகிறார். மேலும் 'தி கோட்' படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும், நடிகை கீர்த்தி சுரேஷும் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனும் கேவையில் உள்ள திரையரங்கிற்கு படத்தை பார்க்க சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் உள்ளிட்டோர் படத்தை பார்வையிட வருகை தர இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com