பிரபல டி.வி. நடிகை தற்கொலை

பிரபல டி.வி. நடிகை தற்கொலை செய்துகொண்டார்.
பிரபல டி.வி. நடிகை தற்கொலை
Published on

பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ஸ்ராவனி. இவர் மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் வசித்து வந்த அவர் வீட்டில் திடீரென்று தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அலறிய பெற்றோர் ஸ்ராவனியை மீட்டு மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்துபோனார். ஸ்ராவனியும் காக்கிநாடாவை சேர்ந்த தேவராஜ் ரெட்டி என்பவரும் டிக்டாக் மூலம் அறிமுகமாகி நெருக்கமாக பழகி வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட மோதலால் ஸ்ராவனி உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஸ்ராவனியின் பெற்றோர் மகள் தற்கொலைக்கு காரணம் தேவராஜ் ரெட்டி என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். ஸ்ராவனிக்கு தேவராஜ் ரெட்டி தாங்க முடியாத அளவுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தார். இதனால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்து இருக்கிறார் என்று புகார் மனுவில் கூறியுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com