வெங்கி அட்லூரி - சூர்யா கூட்டணியில் இணைந்த பிரபலம்

வெங்கி அட்லூரி - சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெரியடப்பட்டுள்ளது.
வெங்கி அட்லூரி - சூர்யா கூட்டணியில் இணைந்த பிரபலம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது 44-வது படமான 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் .இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. மேலும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சூர்யாவின் 46 படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெரியடப்பட்டுள்ளது. மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வெங்கி அட்லூரி - சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள 'சூர்யா 46' படத்தின் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் நிமிஷ் ரவி ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com