"குபேரா" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது.
"குபேரா" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 20ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 'குபேரா' திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 13-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com