

சென்னை,
இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சத்யவான் சாவித்திரி'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் மற்றொரு வழக்கறிஞராக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம். சி.எஸ். இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கறிஞர்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், 'சத்யவான் சாவித்திரி' திரைப்படத்தைப் பார்வையிட்ட தணிக்கை வாரியம், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.