கன்னட படத்தின் ரீமேக்கில் சாந்தனு?

கன்னடத்தில் பீர்பால் என்ற பெயரில் தயாரான திகில் படம் 2019-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தெலுங்கில் திம்மரசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வர தயாராக உள்ளது. தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
கன்னட படத்தின் ரீமேக்கில் சாந்தனு?
Published on

கன்னடத்தில் பீர்பால் என்ற பெயரில் தயாரான திகில் படம் 2019-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தெலுங்கில் திம்மரசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வர தயாராக உள்ளது. தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தமிழ் பதிப்பில் சாந்தனு நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதுகுறித்து அவரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பீர்பால் தமிழ் ரீமேக்குக்கு மதியாளன் என்ற தலைப்பை வைக்க பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் மகனான சாந்தனு சக்கரகட்டி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். சித்து பிளஸ் 2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார். கடந்த வருடம் வெளியான பாவ கதைகள் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது முருங்கக்காய் சிப்ஸ், கசட தபற, ராவண கோட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com