'சூர்யா சம்மதித்தால் முதலில் அவர் படத்தை இயக்குவேன் -''தண்டேல்' இயக்குனர்


Chandoo Mondeti confirms his discussions with Suriya
x
தினத்தந்தி 16 Feb 2025 2:13 PM IST (Updated: 16 Feb 2025 2:40 PM IST)
t-max-icont-min-icon

சூர்யாவை சந்தித்து 'தண்டேல்' இயக்குனர் சந்து மொண்டேட்டி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சந்து மொண்டேட்டி . இவர் 'கார்த்திகேயா, பிரேமம், சவ்யசாச்சி, பிளடி மேரி, கார்த்திகேயா 2' உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் இயக்கியுள்ள படம் 'தண்டேல்'. இப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அல்லு அரவிந்த் தயாரித்துள்ள இப்படம் கடந்த 7ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இவர் அடுத்ததாக கார்த்திகேயா 3 படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், சூர்யாவை சந்தித்து இயக்குனர் சந்து மொண்டேட்டி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக சந்து மொண்டேட்டி கூறுகையில்,

"நான் சூர்யாவை சந்தித்து, அவருடன் பணியாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். அவர் சம்மதித்தால் முதலில் அந்த படத்தை இயக்குவேன். அதற்கு பின் 'கார்த்திகேயா 3'தொடங்கும், "என்றார்.

1 More update

Next Story