

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் 'திரிஷ்யம்'. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியானது. நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, 'திரிஷ்யம்' 3ம் பாகம் மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. நடிகர் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகியுள்ள 'திரிஷ்யம் 3' திரைப்படம், ஏப்ரல் 2 அன்று உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திரிஷ்யம்-3 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கேரள மாநில சட்டமன்ற தேர்தல் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில் படத்தினை ரிலீஸ் செய்தால் வியாபாரம் பாதிக்கக்கூடும் என்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.