குணச்சித்திர நடிகர் பூ ராமு காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குணச்சித்திர நடிகர் பூ ராமு காலமானார்.
குணச்சித்திர நடிகர் பூ ராமு காலமானார்
Published on

சென்னை,

கடந்த 2008-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பூ ராமு. இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தாலும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது.

இதன் காரணமாகத்தான் அவர் தனது பெயருக்கு முன்னாள் பூ ராமு என்று சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் சில படங்களில் பூ ராமு நடித்து வந்துள்ளார்.

நடிகர் பூ ராமுக்கு திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பூ ராமு உயிரிழந்தார். இதனால் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com