11 படங்களில் சார்லி

11 படங்களில் சார்லி
Published on

கே.பாலச்சந்தர் இயக்கிய `பொய்க்கால் குதிரை' படம் மூலம் 1983-ல் அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் உயர்ந்தவர் சார்லி. தமிழ் சினிமா காமெடி வரலாற்றில் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளார். `பிரண்ட்ஸ்' படத்தில் வந்த கோவாலு கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் ரகம்.

சினிமாவில் நகைச்சுவை பற்றி ஆராய்ச்சி செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். இதுவரை 800 படங்களில் நடித்து விட்டார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சார்லி தற்போது மீண்டும் இரண்டாவது ரவுண்ட் தொடங்கி உள்ளார். சமீபத்தில் வெளியான `கொன்றால் பாவம்' படத்தில் சார்லி நடித்த கதாபாத்திரத்துக்கு பெரிய பாராட்டுகள் கிடைத்தன.

தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்து பிஸியாக நடித்து வருகிறார். சார்லி கூறும்போது "3 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்டேன். சிறிய கதாபாத்திரங்கள் வேண்டாம் என்று சில காலம் ஒதுங்கி இருந்தேன். இப்போது எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் வருவதால் நடிக்கிறேன். 11 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com