சார்லி நடித்துள்ள 'பைண்டர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சார்லி, சென்ராயன் நடித்துள்ள 'பைண்டர்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி நடித்துள்ள 'பைண்டர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'பைண்டர்'. மேலும் இந்த படத்தில் நிழல்கள் ரவி, செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அரபி புரொடக்சன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைக்கிறார்.

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் 20-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com