திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது

செக் மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது
Published on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். இவர் காதல் கோட்டை, வெற்றிக்கொடி கட்டு உள்பட பல தமிழ் திரைப்படங்களை தயாரித்தவர். இவர் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக பிரபல நிறுவனத்தில் 1 கோடியே 70 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டது.

இதைதொடர்ந்து, சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com