திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
Chennai High Court refuses to ban film reviews
Published on

சென்னை,

கடந்த மாதம் 14-ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான படம் கங்குவா. இப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால், இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, படம் வெளியாகி 3 நாட்களுக்கு ரசிகர்களின் கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், விமர்சனங்களால் திரைப்படங்கள் தோல்வியடைவதாக கூறி திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது. விமர்சிப்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அவதூறு பரப்பினால் போலீஸில் புகார் அளிக்கலாம் என்று கூறி தடை விதிக்க கோர்ட்டு மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com