இமானின் சென்னை இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

சென்னையில் நடைபெறவிருந்த இமானின் இசை நிகழ்ச்சி கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இமானின் சென்னை இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
Published on

சென்னை,

விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். கிரி, மைனா, கும்கி, கயல், பாண்டியநாடு, ஜீவா, ஜில்லா, விஸ்வாஸம், மனம்கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை, மருது, வெள்ளக்கார துரை, அண்ணாத்த எனப் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார், டி.இமான்.

இசையமைப்பாளர் இமானின் இசைநிகழ்ச்சி, வரும் 14ம் தேதியன்று, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தேதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சிக்கான புதிய தேதியானது விரைவில் அறிவிக்கப்படும் என்றும், விற்பனையான டிக்கெட்டுகள் அனைத்தும் புதிய தேதியன்று செல்லுபடியாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இருப்பினும், டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற விரும்பும் ரசிகர்கள் இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்குள் முழுவதுமாகத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com