சேரனின் "ஆட்டோகிராப்" ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு


சேரனின் ஆட்டோகிராப் ரீ-ரிலீஸ்  தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 6 April 2025 3:20 PM IST (Updated: 6 April 2025 3:21 PM IST)
t-max-icont-min-icon

சேரனின் 'ஆட்டோகிராப்' திரைப்படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மே 16ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

சென்னை,

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம் ஹிட்டானது. ஆட்டோகிராப் வெளியான போது 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.

படம் ரீ-ரிலீஸாவதை ஒட்டி புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆட்டோகிராப்' படம் மே 16ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 More update

Next Story