தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி

தடைகளை கடந்து மீண்டும் சின்மயி டப்பிங் பேசி உள்ளார்.
தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி
Published on


கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் பின்னணி பாடகியாக பிரபலமான சின்மயி தொடர்ந்து பல படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் உறுப்பினராக இருந்து கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். சமந்தாவுக்கும் அதிகமான படங்களில் டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார். பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் மீ டூவில் பேசி வந்தார். இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயியை நீக்கினர்.

இதனால் டப்பிங் சங்கத்தின் தலைவர் ராதாரவிக்கும் சின்மயிக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து பேசி வந்தார்கள். தன்னை நீக்கியதை எதிர்த்து சின்மயி கோர்ட்டுக்கும் சென்றார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ஹீரோ படத்தில் டப்பிங் பேச சின்மயிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹீரோ படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார். ஒரு வருடம் மற்றும் சில நாட்களுக்கு பிறகு நான் தமிழ் படத்தில் டப்பிங் பேசி உள்ளேன். இதற்காக இயக்குனர் மித்ரனுக்கு நன்றி. மித்ரனும் தயாரிப்பாளரும் எனது கதாநாயகர்கள் என்று டுவிட்டரில் சின்மயி பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com