

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ‘பெத்தி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ராம் சரண் தொடங்கியுள்ளார்.
‘பெத்தி’ படத்தின் 2வது பாடலான ‘ராய் ராய் ரா ரா’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியாகி உள்ள, இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலுக்கு ராம்சரண் ஆடியுள்ள நடனம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி ‘பெத்தி’ படத்தின் நடனம் குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் “எனது மகனின் நடன அசைவுகளால் மிகவும் உற்சாகம் அடைந்து இருக்கிறேன். ‘பெத்தி’படத்தில் வரும் ‘ராய் ராய் ரா ரா’ பாடல் திரையில் அனல் பறக்கும். அற்புதமான ஆற்றல் உணர்ச்சி மற்றும் சினிமா புத்திசாலித்தனத்தின் கலவையாகும் ராம் சரண் சிரமமின்றி நேர்த்தியாகவும் மின்னூட்டும் வேகத்துடனும் நடனம் ஆடி இருப்புது மிகுந்த பெருமையை தருகிறது அவர் நகரும் விதம் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது இப்படத்தை அற்புதமாக படமாக்கியுள்ள இயக்குனர் புச்சி பாபு சனா, மாயாஜால இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சக்தி வாய்ந்த நடன மாஸ்டர் ஜானி ஆகியோருக்கு பாராட்டுக்கள்” என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்