சிரஞ்சீவியை சந்தித்த அஜித் - வைரலாகும் புகைப்படம்
விஸ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அஜித், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து பேசினார்.
ஐதராபாத்,
நடிகர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஸ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அஜித் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து பேசினார். இது குறித்தான புகைப்படங்களை சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதனுடன் பகிர்ந்த பதிவில்,நேற்று மாலை விஸ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு அஜித் வந்திருந்தார். அவரது முதல் தெலுங்கு படமான பிரேம புஸ்தகத்தை நினைவுக்கூர்ந்தோம். அவருடைய மனைவி ஷாலினி என் படத்தில் என் குழந்தைகளில் ஒருவராக நடித்தார். அஜித் அடைந்திருக்கும் இந்த அந்தஸ்தை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி 'விஸ்வம்பரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். பேண்டசி திரில்லர் பாணியில் உருவாகும் 'விஸ்வம்பரா' படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார்.