தனக்கு புற்றுநோய் பாதிப்பா...! நடிகர் சிரஞ்சீவி விளக்கம்...!

நடிகர் சிரஞ்சீவிக்கு புற்று நோய் பாதிப்பு என்ற வதந்தியால் சிரஞ்சீவி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தனக்கு புற்றுநோய் பாதிப்பா...! நடிகர் சிரஞ்சீவி விளக்கம்...!
Published on

ஐதராபாத்

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சமீபத்தில் முக்கிய தொலைக்காட்சி ஊடகங்களிலும், இணையதள ஊடகங்களிலும் தகவல் வெளியானது. இது தெலுங்கு சினிமா உலுக்கி உள்ளது. இதனால் நடிகர்கள் சிரஞ்சீவி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வதந்தி குறித்து நடிகர் சிரஞ்சீவி கூறியதாவது:-

"சில நாட்களுக்கு முன்பு புற்றுநோய் மையம் திறக்கும் போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அப்போது நான் பேசும் போது. நானே பெருங்குடல் ஸ்கோப் பரிசோதனை செய்தேன். புற்றுநோய் அல்லாத பாலிப்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன என கூறினேன்.

முதலில் பரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால், அது புற்றுநோயாக மாறியிருக்கும்' என கூறினேன். எனவே அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதைத்தான் நான் அப்போது கூறினேன்.

சில ஊடகங்கள் இதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, விழிப்புணர்வு இல்லாததால், எனக்கு புற்றுநோய் வந்துவிட்டது.சிகிச்சையால் நான் உயிர் பிழைத்தேன் போன்ற கதைகளைப் கட்டிவருகிறார்கள்.

இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல நலம் விரும்பிகள் எனது உடல்நிலை குறித்து செய்திகளை எனக்கு அனுப்புகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் இந்த விளக்கம். அத்தகைய பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். பொருள் புரியாமல் முட்டாள்தனமாக எழுதாதீர்கள். இதனால் பலர் பயந்து, வேதனை அடைந்துள்ளனர் என சிரஞ்சீவி கூறி உள்ளார்.

தமிழில் அஜித் நடித்து வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் படமான போலோ சங்கர் படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. ஏகே எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தற்போது புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. மெஹர் ரமேஷ் இயக்கிய இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com