சிரஞ்சீவியின் 158வது படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘காகா’ படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிரஞ்சீவியின் 158வது படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on: 

சிரஞ்சீவியின் ‘காகா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் என்ற அழைக்கப்படும் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. இவர் தற்போது இயக்குநர் பாபி கொல்லியுடன் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

படத்தின் டைட்டில் அறிவிப்பு

சிரஞ்சீவிக்கு பிறந்த நாளில் படக்குழு படத்தின் டைட்டில், கிளிம்ப்ஸ் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்தது. இந்த படத்திற்கு ‘காகா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 158-வது படமாக உருவாகும் இதனை கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில், அனஸ்வரா ராஜன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

சங்கராந்தி வெளியீடு

சிரஞ்சீவி மற்றும் பாபி கொல்லி கூட்டணி ஏற்கனவே ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இணைந்து வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த புதிய கூட்டணி மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறால் பண்ணையில் பணியாற்றும் சிரஞ்சீவி அங்குள்ள தொட்டிகளில் துப்பாக்கிகளை வைத்திருப்பது போன்ற கிளிம்ஸ் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

இந்நிலையில், சிரஞ்சீவியின் ‘காகா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

X