சிரஞ்சீவியின் ‘மெகா 158’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

நடிகர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் காட்சிக்கான கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

சிரஞ்சீவியின் ‘மெகா 158’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
Published on

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டாரான சிரஞ்சீவி, தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது அவர் தனது 158-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்காலிகமாக ‘மெகா 158’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் பாபி இயக்குகிறார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளியான படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இது அவர்களது இரண்டாவது கூட்டணிப் படமாக அமைந்துள்ளது.

அப்பா-மகள் உறவை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் நடிகை அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ‘மெகா 158’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன. படத்தின் தொடக்க விழாவில் நடிகர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் காட்சிக்கான கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com