விக்ரம் ரசிகர்கள் திட்டுகிறார்கள்...''சியான்63'' அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்


Chiyaan 63 - Producer gives update
x

'மண்டேலா', 'மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார்.

சென்னை,

விக்ரமின் 63-வது படத்தை 'மண்டேலா', 'மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க உள்ளார்.'மாவீரன்' படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின்கீழ் அருண்விஸ்வா இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அருண்விஸ்வா கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,

"சியான்63 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விக்ரம் ரசிகர்கள் நான் எந்த அப்டேட்களையும் கொடுக்கவில்லை என்று என்னை திட்டுகிறார்கள். அப்டேட் சரியான நேரத்தில் வரும். இப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம்" என்றார்.

1 More update

Next Story