கீர்த்தி சுரேஷ் படத்துக்கு போட்டியாக வருகிறதா 'தங்கலான்'?

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கீர்த்தி சுரேஷ் படத்துக்கு போட்டியாக வருகிறதா 'தங்கலான்'?
Published on

சென்னை, 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித், கடந்த ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

தற்போது, இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், , 'தங்கலான்' படம் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என கூறியுள்ளார். ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படமும் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளநிலையில், அதற்கு போட்டியாக  'தங்கலான்' படமும் அதே நாளில் வெளியாவதாக தகவல் வெளியாகி இருப்பது இருவரது ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com