கார்த்தி படத்தில் சவுகார் ஜானகி

தேவ் படத்துக்கு பிறகு கார்த்தி ‘கைதி’ படத்தில் நடித்தார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் திரைக்கு வர உள்ளது.
கார்த்தி படத்தில் சவுகார் ஜானகி
Published on

தற்போது பாபநாசம் படத்தை எடுத்து பிரபலமான மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

இதில் சத்யராஜ், ஜோதிகா, நிகிலா விமல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். படப்பிடிப்பு ஊட்டியை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிக்க பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியை இப்போது ஒப்பந்தம் செய்துள்ளனர். சவுகார் ஜானகி 2014-ல் திரைக்கு வந்த வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்து இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது கார்த்தி படத்தில் நடிக்க உள்ளார். கிரைம், திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இதன் படப் பிடிப்பை முடித்துவிட்டு பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com