இன்று பிறந்தநாள் கொண்டாடும் சினிமா பிரபலங்கள்

இன்று சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சினிமா பிரபலங்கள்
Published on

சென்னை,

வடிவேலு

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளவர் வடிவேலு. நடிகர் மட்டுமில்லாமல் சில பாடல்களும் பாடியுள்ளார். மதுரையை சேர்ந்த வடிவேலு 1988-ல் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'என் தங்கை கல்யாணி' என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் 'வைகைப்புயல்' என்றும் அழக்கப்படுகிறார். வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கவுதம் கார்த்திக்

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவுதம் கார்த்திக். இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மணிரத்தினம் இயக்கிய 'கடல்' திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'வைராஜா வை, தேவராட்டம், பத்து தல, ஆகஸ்ட் 16 1947' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வளர்ந்து வரும் நடிகர் கவுதம் கார்த்திக் இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லை' படத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வருகிறார்.

கிரிஷ்

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகர் கிரிஷ். இவர் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் வரும் மஞ்சள் வெய்யில் எனும் பாடலின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன. இன்று இவர் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அமலா அக்கினேனி

அமலா அக்கினேனி இந்திய திரைப்பட நடிகையும், பரதநாட்டிய நடன கலைஞரும் ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று இவர் தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com