

அதில் ரஜினிகாந்த் கூறும்போது, பேட்ட' படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. காலா, கபாலி போன்ற படங்களில் கொஞ்சம் வயசான கேரக்டர் பண்ணி இருந்தேன். பேட்ட' படத்தில் என்னை ரொம்ப ஸ்டைலிஷா காட்டி இருந்தாங்க. பேட்ட' ரிலீஸ் ஆன அன்றைய தினமே இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம்' திரைப்படமும் வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. அதனால் விஸ்வாசம்' படத்தை நான் பார்த்தேன். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க படத்தோட கலரே மாறி, எனக்கு தெரியாமலேயே கை தட்டினேன். அதன் பிறகு சிவாவை அழைத்து எனக்கு ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா என கேட்டேன். அவர் நல்ல கதையில் நீங்கள் இருந்தாலே படம் சூப்பர் ஹிட் என கூறினார். நீங்க கிராமத்து வேடங்கள் நடித்து பல வருடம் ஆகி விட்டது என்றும் தெரிவித்தார்.
நல்ல கதை கொண்டு வாங்க என கூறினேன். 15 முதல் 20 நாட்களில் கதை தயாராகி விட்டது என கூறி கதையை சொல்ல தொடங்கினார். கதையை சொல்ல சொல்ல. அதிலும் கிளைமாக்சில் என்னை அறியாமலேயே கண்ணில் தண்ணீர் வந்து அழவைத்து விட்டது. பின் அவர் கையை பிடித்து கொண்டு இதே போல் படம் எடுக்க வேண்டும் என கூறியதும், இதை விட சூப்பராக படத்தை எடுத்து விடலாம் என கூறினார். அதன்படி அண்ணாத்த படத்தை எடுத்தார். இந்த படத்தை எடுக்கும் போது, பல பிரச்சினைகள் வந்தது, அவை அனைத்தையும் சிரித்து கொண்டே சமாளித்தார் என்று தெரிவித்துள்ளார்.