சினிமா வாழ்க்கை நிலையற்றது -நடிகை பிரணிதா

சினிமா வாழ்க்கை நிலையற்றது என நடிகை பிரணிதா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சினிமா வாழ்க்கை நிலையற்றது -நடிகை பிரணிதா
Published on

உதயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரணிதா. சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். சூர்யாவுடன் மாஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நடிகைகள் படும் கஷ்டங்களை பிரணிதா பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பிரணிதா அளித்துள்ள பேட்டியில், சினிமா வாழ்க்கை நிலை இல்லாதது. அது தெரிந்தும் சினிமா வாழ்க்கையை நடிகைகள் தேர்ந்தெடுத்து கொள்கிறோம். நடிகைகள் வாழ்க்கை கஷ்டங்கள், மேடு பள்ளங்கள் நிரம்பியது. உடல்களை வருத்திக் கொள்கிறோம். வெற்றி தோல்வி இரண்டையும் குறைந்த இடைவெளியில் சந்திக்கிறோம்.

அசவுகரியமான இடங்களில் கூட உட்கார்ந்து கொள்வது, சாப்பிடுவது, தூங்குவது என்று இருப்போம். கவுரவம் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறோம். சுகாதாரமற்ற இடங்களில் கூட பணியாற்றுகிறோம். இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் குடும்பம், சினேகிதிகள், உறவினர்களை விட்டு குளிருக்கு நடுங்கியும், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பணியாற்றுகிறோம். எங்கள் சக்திக்கு மீறி உழைக்கிறோம். இவ்வளவு கஷ்டமும் கலைக்காகவும் ஒரு நல்ல வெற்றி கிடைக்காதா என்பதற்காகவும்தான்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com