நான் கேமராவுக்கு முன்னால் ஆடை அணிந்திருக்கிறேனா, இல்லையா? என்று யோசிப்பதில்லை - அப்சரா ராணி அதிரடி

நான் கேமராவுக்கு முன்னால் இருக்கும்போது, ஆடை அணிந்திருக்கிறேனா, இல்லையா? என்று யோசிப்பதில்லை என கவர்ச்சி நாயகி அப்சரா ராணி கூறி உள்ளார்.
நான் கேமராவுக்கு முன்னால் ஆடை அணிந்திருக்கிறேனா, இல்லையா? என்று யோசிப்பதில்லை - அப்சரா ராணி அதிரடி
Published on

ஐதராபாத்,

தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை அங்கீதா மஹாராணா. ஆர்.ரகுராஜின் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  அவரது அடுத்த படம் 2020 ஆம் ஆண்டில், சத்ய பிரகாஷ் இயக்கிய காதல் திகில் படமான ஒல்லல்லா ஊல்லல்லா.

ராம் கோபால் வர்மாவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.  அங்கிதா என்ற பெயரை அப்சரா ராணியாக மாற்றிக்கொண்டார். அந்த படத்தில் அவர் படு கவர்ச்சியாக நடித்து உள்ளார்.  அப்சரா ஒடிசாவை சேர்ந்த பெற்றோருக்கு டேராடூனில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பிலும் மாடலிங்கிலும் ஆர்வம் கொண்டவர்.

ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் படத்தில் நைனா கங்குலியுடன் இணைந்து இந்தியாவின் முதல் லெஸ்பியன் கிரைம் ஆக்ஷன் படத்தில் நடித்தார்.

அப்சரா ராணி படு கவர்ச்சியாக நடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு சமீபத்தில் அவர் அளித்த அதிரடி பதில் வருமாறு:-

டைரக்டர் என் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதே எனது பணி. அதனால் என் அந்த படத்தின் கேரக்டர் என்ன கேட்கிறதோ அதை அணிய தயாராக இருப்பேன். நான் கேமராவுக்கு முன்னால் இருக்கும்போது, நான் ஆடை அணிந்திருக்கிறேனா, இல்லையா? என்று யோசிப்பதில்லை.

ஏனென்றால் நான் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. கதாபாத்திரம் கேட்கும் உடைகளை அணிவேன். அது அங்கே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதில் டைரக்டர் உறுதியாக இருப்பார்.  இவ்வாறு அப்சரா ராணி தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com