சினிமா கேள்வி பதில்! குருவியாரே, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ன மாதிரியான படம்?

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
சினிமா கேள்வி பதில்! குருவியாரே, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ன மாதிரியான படம்?
Published on

குருவியாரே, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் தலைவன் இருக்கின்றான் என்ன மாதிரியான படம்? (ஆர்.உதயகுமார், சென்னை-1)

அடிதடி, சண்டை காட்சிகளுடன், கமல்ஹாசனின் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தும் விருந்தாக அமையும்!

***

விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகை யார்-யார்? (வேல்முருகன், வேலூர்)

நடிகர்களில் கமல்ஹாசன், நடிகைகளில் நயன்தாரா ஆகிய இருவரும் ...!

***

அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக நடித்தவர்கள் மற்றும் இப்போதைய நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி கூற முடியுமா? (எஸ்.அரவிந்த், லால்குடி)

அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவரும் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்கள். தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணி, வடிவேல், சந்தானம் ஆகியோர் கதாநாயகனாக நடித்து விட்டார்கள். இப்போது சூரி, யோகி பாபு ஆகிய இருவரும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

***

குருவியாரே, தமிழ் பட கதாநாயகிகளில் நீச்சல் தெரிந்தவர் யார்? நீச்சல் போட்டி வைத்தால் அவரால் வெற்றி பெற முடியுமா? (ஏ.ஜார்ஜ், கோவை)

எல்லாவிதமான நீச்சலும் தெரிந்தவர், திரிஷா. நீச்சல் போட்டி வைத்தால், அவரால் நிச்சயமாக வெற்றி பெற முடியுமாம்!

***

குருவியாரே, மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா அமைதியாகி விட்டாரே...அவர் புதிய படங்களில் நடிக்கிறாரா, இல்லையா? (என்.பரத், விருதுநகர்)

அதர்வாவின் தம்பி விரைவில் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அதனால் அதர்வா தன் தம்பிக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறாராம்!

***

திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று சொன்ன நடிகைகளில் பெரும்பாலானவர்கள் மீண்டும் நடிக்க வந்து விடுகிறார்களே...? ஏன் அப்படி சொல்ல வேண்டும்? சொல்லிவிட்டு ஏன் மறுபடியும் வரவேண்டும்? (ஆர்.புவன், சேலம்)

திருமணம் செய்து கொள்ளப்போகும் மிதப்பில், அப்படி சொல்லி விடுகிறார்களாம். அதன்பிறகு ஏற்படும் விரக்தியில், மீண்டும் நடிக்க வந்து விடுகிறார்களாம்!

***

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் நயன்தாராவுக்கு பொருந்துமா? (கி.ஜெயபால், வந்தவாசி)

கடந்த 15 வருடங்களாக நடித்து வரும் நயன்தாராவை விட, 40 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் நாயகிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கே இந்த பட்டம் பொருந்தும்!

***

குருவியாரே, குமாரி சச்சு, கோவை சரளா ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

இருவருமே நகைச்சுவை நடிகைகள். சச்சு, 1960-களில் சிரிக்க வைத்தார். சரளா 1980-களில் இருந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்!

***

பிரபு நடித்த 100-வது படம் எது? அந்த படத்தை இயக்கியவர் யார்? படத்தின் கதாநாயகி யார்? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

பிரபு நடித்த 100-வது படம், ராஜகுமாரன். அந்த படத்தை இயக்கியவர், ஆர்.வி.உதயகுமார். நதியா, மீனா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருந்தார்கள்!

***

குருவியாரே, எம்.ஜி.ஆருடன் எம்.ஆர்.ராதா நடித்த கடைசி படம் எது? (ஆர்.சுதாகர், ஈரோடு)

பெற்றால்தான் பிள் ளையா.

***

அஜித்குமார் அடுத்து நடிக்கும் படத்தை இயக்கப் போகிறவர் யார்? (சி.அன்பழகன், கடலூர்)

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத், அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தையும் இயக்கு கிறார்!

***

குருவியாரே, விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் புதிய படம் எது? (ஜி.துரை, கரூர்)

விக்னேஷ் சிவன், இப்போது தயாரிப்பாளராக மாறிவிட்டார். அவர் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்!

***

விஜய்சேதுபதியின் சொந்த ஊர் எது, சினிமாவுக்கு வரும்முன் அவர் என்ன தொழில் செய்து கொண்டிருந்தார்? (எல்.மதன், அரக்கோணம்)

விஜய்சேதுபதியின் சொந்த ஊர், ராஜபாளையம். அவர் நடிக்க வருவதற்கு முன்பு பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார்!

***

குருவியாரே, கமல்ஹாசனுடன் அர்ஜுன் இணைந்து நடித்த படம் எது? (ஜே.ராஜசேகர், புதுக்கோட்டை)

குருதிப்புனல்!

***

தேவிகாவின் மகள் கனகா என்ன செய்கிறார்? எப்படி இருக்கிறார்? (என்.வேணி, திருவண்ணாமலை)

கனகா, தற்போது சினிமாவில் நடிக்கவில்லை., பெரும்பாலும் அவர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை!

***

முன்னாள் கவர்ச்சி நடிகைகள் டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகிய இருவரும் யாருடைய வாரிசுகள்? (வி.மோகன், காஞ்சீபுரம்)

டிஸ்கோ சாந்தி, நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள். பபிதா, நடிகர் ஜஸ்டினின் மகள்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com