

குருவியாரே, கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்ஷனில், விஜய் ஒரு படத்தில் நடிப்பாரா? சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படம் எது, அந்த படத்தை தயாரிப்பவர் யார், இயக்குபவர் யார்? (கே.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்)
கவுதம் வாசுதேவ் மேனன், விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னார். அந்த கதை விஜய்க்கு பிடித்து இருந்தது. ஏனோ அந்த படம் கைவிடப்பட்டு விட்டது. விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பவர், கல்பாத்தி அகோரம். இந்த படத்தின் டைரக்டர், அட்லீ!
***
காஜல் அகர்வாலிடம் போய், ஐ லவ் யூ என்று சொன்னால் என்ன செய்வார்? (ப.வெற்றிவேல், சேலம்)
சிரித்துக்கொண்டே நன்றியை ஆங்கிலத்தில் தெரிவிப்பார்!
***
திரிஷா வெளிநாடுகளுக்குப் போய் உயிர் பணயம் வைக்கிற விளையாட்டுகளில் ஈடுபடுகிறாரே...அவருக்கு பயம் என்பதே கிடையாதா? (ஏ.அகமது ஷெரீப், செய்துங்க நல்லூர்)
பயந்தால், பதினைந்து வருடங்களாக திரையுலகில் அவர் நடித்துக் கொண்டிருக்க மாட்டார். பயம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கக் கூடியவர், திரிஷா! எங்கும் எதிலும் துணிச்சல் மிகுந்தவர், அவர்!
***
சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது? அந்த படத்தின் கதாநாயகி யார்? டைரக்டர் யார்? (ரா.சுந்தரபாண்டியன், மதுரை)
சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், என்.ஜி.கே. அந்த படத்தில் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். செல்வராகவன் டைரக்டு செய்திருக்கிறார். படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது!
***